tamilnadu

img

சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலைகள் கொரோனாவை விட கொடியவை - வழக்கறிஞர் இ.சுப்பு முத்துராமலிங்கம்

வழக்கறிஞர் இ.சுப்பு முத்துராமலிங்கம்

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப்பட்ட தருணத்திலும் அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்வுகளிலும் பல்வேறு சட்ட மீறல்கள் இருப்பது காட்சி ஊடகங்கள் மூல மாக தெரிய வருகின்றது. குறிப்பாக (1) சிசிடிவி பதிவுகள் மூலம் போலீசார் பொய்யாக பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரை யும் ஒன்றாக காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்ல வில்லை. (2) சட்ட விரோதமாக அழைத்துச் சென்ற பிறகு கைது குறிப்பாணை உடனடியாக தயார் செய்யப்பட்டு உற வினர்களுக்கு வழங்கப்படவில்லை. (3) ஜெயராஜ், பென்னிக்ஸின்  சொந்த உடமைகள் அவர்களது உறவி னர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. (4) 506 என்ற பிரிவை தவிர இதர பிரிவுகள் ஜாமீனில் விடத்தக்க பிரிவுக ளாக இருக்கும் பொழுது குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவு .41-ஏ –ன்படி நோட்டீஸ் அனுப்புவதை தவிர்த்து காவல்நிலையத்தில் வைத்து துன்புறுத்தி சித்ரவதை செய்துள்ளனர். (5) ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவ ருக்கும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் குற்ற வியல் விசாரணை முறைச்சட்டம் பிரிவு .54-ன் நோக்கத்திற் கிணங்க மருத்துவ அறிக்கை பெறவில்லை. (6) இருவரை யும் ரிமாண்ட் செய்யும் பொழுது நீதிபதி வெளிப்படையான முறையில் பொறுப்பை உணர்ந்து மருத்துவ சிகிச்சை வழங்கிட உத்தரவிடவில்லை. (7) கோவில்பட்டி கிளைச் சிறை யில் உரிய மருத்துவ சிகிச்சை வழங்கிடவில்லை. (8) போலீசார் சம்பந்தப்பட்ட வழக்கை உயர்மட்ட காவல் அதிகாரி விசாரணை செய்திட உத்தரவிடவில்லை.

காவல்நிலைய மரணங்களில் எவ்வாறு விசாரணை?

2006 ஆம் வருடத்திற்கு முன்பாக இது போன்ற காவல் வைப்பில் இருக்கும் போது எவர் ஒருவரும் இறந்து போயிருந்தால் போலீஸ் ஸ்டண்டிங் ஆர்டர் பிரிவு 151- ன் படி அந்த சரக ரெவனியூ டிவிசனல் ஆபீஸர் விசாரணை மேற்கொண்டு ரெவின்யூ என்கொயரிஸ் ஆக்டின்படி அந்த அறிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி அதன் பிறகு சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றமிழைத்த போலீசார் தனி வழக்காக தாக்கல் செய்வார்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் இருவரும் காவல் நிலைய சித்ரவதை துன்புறுத்தல் காரணமாக இறந்து போனதற்கு கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய குற்ற எண்கள். 649, 650 –ல் குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவு 176 – 1-ஏ –ன் கீழ் 23-06-2020 அன்று இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு (இருவரும் வெவ்வேறு நேரங்களில் இறந்து போனதினால்) அவை சம்மந்தப்பட்ட நீதித்துறை நடுவருக்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இந்த பிரிவு 176 -1-ஏ ஆனது 23-06-2006 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் படி ஒரு புகாரை விசாரணை செய்வதை போன்றே ஜூடிசியல் மாஜிஸ்ரேட்டு சாட்சிகளை விசாரணை செய்திட வேண்டும். இந்த விசாரணையை மேற்கொள்ளும் ஜூடிசியல் மாஜிஸ் ரேட்டு அவரது அறிக்கையையும் அவர் கைப்பற்றிய ஆவ ணங்களின் நகலையும் மேற்படி குற்ற எண்கள். 649, 650 –ல் புலன் விசாரணை மேற்கொள்ளும் அதிகாரி யிடம் ஒப்படைப்பார். நடைமுறையில் நீதிபதி அவரது விசார ணையை முடித்து போலீசார் மீது கொலை வழக்கினை பதிவு செய்திட வேண்டும் என்று ஆல்டரேசன் ரிப்போர்ட் கொடுத்த பிறகு தான் போலீசார் 302 குற்றபிரிவில் புலன் விசாரணை செய்வார்கள் என்ற தவறான கற்பிதம் உள்ளது. உண்மையில் புலன் விசாரணை அதிகாரி சாட்சியங்களை திரட்டுவதற்காக செய்யும் புலன் விசாரணைக்கும், ஜூடிசி யல் மாஜிஸ்ரேட்டு மேற்படி பிரிவு 176 -1-ஏ-ன் கீழ் நடத்தும் விசாரணைக்கும் சம்மந்தம் இல்லை என்றும் அதாவது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 174 –ல் பதிவு செய்யப்படும் “மரணத்திற்கான காரணம் குறித்து சந்தே கம் எழுகின்ற” வழக்குகளில் எவ்வாறு புலன் விசாரணை செய்திட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் 17-09-2018 அன்றே மனோகரி என்ற வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கு முன்பாகவே ஜூடிசியல் மாஜிஸ் ரேட்டு மேற்படி பிரிவு 176 -1-ஏ-ன் கீழ் நடத்தும் விசார ணைகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து கஸ்தூரி என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 19-12-2014 அன்று வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. உண்மையில் ஜூடிசியல் மாஜிஸ்ரேட்டு நடத்தும் விசா ரணை என்பது மரணத்திற்கான காரணத்தை கண்டு பிடிப்பதற்காக இறந்து போனவர்களின் உறவினர்களை விசாரணை செய்து தயார் செய்யும் அறிக்கையாகும். ஜெயராஜ் பென்னிக்ஸன் வழக்கில் 23-06-2020 அன்றே கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய குற்ற எண்கள். 649, 650 –ல் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டி ருந்த போதிலும் கூட 30-06-2020 அன்று உயர்நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவுப்படிதான் சிபிசிஐடி போலீசார் வழக்கினை அவர்கள் கைவசம் எடுத்துக் கொண்டு விசாரணையை துவங்குகின்றனர்.

செல்வராணிக்கு நீதி வழங்கிய உயர்நீதிமன்றம்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் துன்புறுத்தி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. 23.06.2020 அன்று சாத்தான்குளத்திற்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் உள்ளிட்ட தோழர்கள் பிரேதப் பரிசோதனை நடந்த நாளிலும் அதனை தொடர்ந்து நீதிபதி நடத்திய விசாரணையிலும் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்தார். 06.07.2020 அன்று கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சாத்தான்குளத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும் என்று தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு காவல்நிலைய சித்ர வதை நிகழ்வுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உறுதுணை யாக இருப்பதாக தெரிவித்தனர். அதே போல் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, பென்னிக்ஸின் சகோதரி பெர்சியிடம் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார். மேலும் பல அரசியல் கட்சியினரும் சாத்தான்குளம் காவல்நிலைய இரட்டை படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தனர். தமிழக அரசு முதலில் இரண்டு உதவி ஆய்வாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்தது. பிறகு காவல்ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலில் வைத்தது. காவலர்கள் வேறு காவல்நிலையத்திற்கு மாற்றப் பட்டதாக கூறியது.

23-06-2020 அன்று ஜெயராஜின் மனைவி செல்வ ராணி தனது கணவர் மற்றும் மகனின் பிரேதப் பரிசோத னையை மருத்துவர்கள் குழு மூலம் செய்திட வேண்டும் என்றும் அதனை வீடியோ ஒளிப்படம் மூலம் பதிவு செய்திட வேண்டும் என்றும்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கிரிமி னல் ஓபி. மனு எண். 6651 – 2020 –ஐ தாக்கல் செய்கின்றார். இதனை அவசர மனுவாக விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மேற்படி உத்தரவினை வழங்கி விட்டு வழக்கின் தீவிரத்தன்மை கருதி மூத்த நிர்வாக நீதிபதி முன்பாக மேல்நடவடிக்கைக்கு கொண்டு செல்லுமாறு நீதித்துறை பதிவாளருக்கு உத்தரவிடுகிறது.

சிபிசிஐடி முடித்த இடத்திலிருந்து தொடரும் சிபிஐ  

இதன் தொடர்ச்சியாக 24-06-2020 அன்று சாத்தான்குளம் காவல்நிலைய இரட்டை கொலை வழக்கை தானாக விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை (சுய மோட்டோ ரிட் மனு எண்.7042 -2020) இந்த வழக்கை கண்காணித்து வந்ததோடு 29-06-2020, 30-06-2020, 02-07-2020 ஆகிய தேதிகளில் போற்றத்தக்க உத்தரவுகளையும் தொடர்ச்சியாக பிறப்பித்து, வழக்கை கண்காணித்து வருகின்றது. உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவுகளில் தூத்துக்குடி மாவட்ட நீதிபதியும் விசாரணையின் போக்கு குறித்து அறிக்கைகள் அனுப்பி வருவதை சுட்டிக் காண்பித்தது. தமிழக அரசு 22-06-2020 அன்று கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் வழக்கை சிபிஐ–க்கு மாற்றி 29-06-2020 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. சிபிஐ–யும் 08.07.2020 அன்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசார ணையை துவக்கிட உள்ளார்கள். சிபிசிஐடி புலன் விசாரணை முடித்துள்ள நிலையிலிருந்து தொடர் விசார ணையை சிபிஐ செய்வார்கள். 

போலீசாரின் அராஜகம்- தமிழக அரசின் நியாயமற்ற செயல்

மேலும் குற்றவியல் விசாரணை முறை சட்டப்படி சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு அதுவும் உயர்நீதி மன்ற உத்தரவுப்படி 28.06.2020 அன்று சென்ற கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 அவர்களை அவரது சட்டப்பூர்வ பணியை செய்யவிடா மல் குறுக்கீடு செய்து, சாட்சிய ஆதாரங்களை சேகரிக்க விடாமல் தடுத்து “உன்னால் ஒன்றும் புடுங்க முடியாதுடா” என்று அவமரியாதை செய்தும் போலீசார் செயல்பட்டனர். மேலும் சாத்தான்குளம் காவல்நிலைய காவலர் ரேவதி என்பவர் மேற்படி நீதித்துறை நடுவரிடம் வாக்குமூலம் அளித்த பிறகு கையொப்பம் போட விடாமல் நிர்ப்பந்தம் செய்துள்ளனர். இது விபரம் தூத்துக்குடி மாவட்ட நீதிபதி மூலம் உயர்நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டவுடன் தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டி.குமார் சாத்தான்குளம் சரக டி.எஸ்.பி. சி.பிரதாபன், காவலர் எண்.1744 மகாராஜன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் 30-06-2020 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் சாத்தான்குளம் காவல்நிலைய ஆவணங்களை வருவாய் துறை அதிகாரி கைப்பற்றிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டவர்க ளுக்காக தமிழக அரசின் அரசு வழக்கறிஞரே ஆஜராகிட தமிழக அரசு அனுமதித்தது நியாயமானதல்ல. நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாகக் கூறி பிறகு உடனே வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்தனர்.

தொடர்ந்து கண்காணிக்கும் உயர்நீதிமன்றம்

பிரேதப் பரிசோதனை சான்றிதழ்கள் மூலமாக சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்திட தகுந்த அடிப்படை முகாந்திரம் இருப்பதாக உயர்நீதி மன்ற மதுரை கிளை தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ள தோடு சிபிஐ விசாரணையை மேற்கொள்வது பற்றி அரசு விரும்பினால் மறுபரிசீலனை செய்திடலாம் என்று கூறி யுள்ளது. உண்மையில் 23.06.2020 அன்றே சாத்தான்குளம் காவல்நிலைய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்திட வேண்டுமென்று ஜெயராஜின் மனைவி செல்வராணி புகார் மனு அளித்து விட்டார். இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கையில் ஒப்புக்கொண்டுள்ளார். அதே சமயத்தில் சிபிஐ விசாரணை தொடங்கும் முன்பாக சிபிசிஐடி  டி.எஸ்.பி அனில்குமாரை விசாரணை அதிகாரியாக நியமித்துள்ளது. அவர் வழக்கு ஆவணங்களை பெற்று விசாரணையை உடனடியாக புலன் விசாரணையை துவக்கிட வேண்டுமென்றும் கோவில்பட்டி குற்றவியல் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ள சாத்தான்குளம் காவல்நிலைய காவலர் ரேவதியின் வாக்குமூலத்தை கு.வி.மு.ச. பிரிவு 164-ன் கீழ் பதிவு செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்றும் காவலர் ரேவதி (ம) அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை உயர்நீதிமன்ற மதுரை  கிளை தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு அவர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் இறந்து விட்டதி னால் அவர்கள் மீதான வழக்கில் மேற்கொண்டு புலன் விசாரணை செய்திட வேண்டியதில்லை என்று ‘தமிழ் இந்து’ பத்திரிக்கை வாயிலாக கூறியுள்ளார். இது உண்மை என்ற போதிலும் கூட குற்ற எண் 312-2020 வழக்கில் போலீ சார் அவர்கள் செய்த சட்ட விரோத காரியத்தை நியாயப் படுத்துவதற்காக புனைந்துள்ள மேற்படி வழக்கு சம்மந் தப்பட்ட ஆவணங்கள் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அது பொய் வழக்கு என்பது நிரூபிக்கப்பட வேண்டும்.

ஆறு மாத காலத்திற்குள்  நீதி வழங்குக!

எனவே சாத்தான்குளம் காவல்நிலைய இரட்டை படுகொலை வழக்கில் தாமதிக்காது தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகின்றது என்பதனை நிலைநிறுத்தும் முக மாக தொடர்ந்து புலன் விசாரணையை கண்காணித்து வரக்கூடிய உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவிற்கு இணங்க ஒரு மாத காலத்திற்குள் சம்பந்தப்பட்ட எதிரிகள் அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை சிபிஐ உறுதி செய்திட வேண்டும். அதே போல் வழக்கு விசாரணையை சட்டப்படி தொய்வின்றி நடத்தி அதிக பட்சமாக ஆறு மாத கால கட்டத்திற்குள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி வழங்கப்பட வேண்டும். அதற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தின ருக்கு சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல் கட்சியினர் மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.


 

;